Thought for the day
வெள்ளி, 28 மே, 2010
உங்கள் ப்ளாக் பின்புலம் கலர் கலராய் ..
உங்கள் ப்ளோகை பல வண்ணங்களில் பின்புலம் (background ,) மாற்றி அழகு பார்க்க
கீழே உள்ள கோடை body , டாக் உள்ளே காப்பி பன்ணவும்!.
அல்லது டாஷ்போர்ட்,லேயௌடில், add gadget , html , / ஜாவஸ்க்ரிப்ட்,
செலக்ட் செய்து காபி செய்து save பண்ணவும். !
லிஸ்ட் பாக்ஸ்ல் கிடைக்கும் 23 கலர்கலில் ஒன்றை செலக்ட் செய்து
உங்கள் back ground ,கலரை மாற்றி மகிழுங்கள். !!
செவ்வாய், 25 மே, 2010
ஆஹா டெக்னாலஜி!!
இன்றைய நவீன டெக்னாலஜி மூலம் நமக்கு எத்தனை வசதிகள் ..
முன்பெல்லாம் குடும்பத்தில் ஒருவர் வெளிநாடு சென்றால் ..
தபால் மற்றும் தந்தி மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்வோம்.
பிறகு போன் கால் , மொபைல் என்று நவீன சாதகங்கள் மூலம்
தகவல்களை பரிமாற்றம் செய்தோம் .. இன்று நெட்வொர்க் வழியாக
இன்டர்நெட் வசதியை பெற்று வெகு சுலபமாக தகவல்களை பரிமாருகிரோம் .
வீட்டுக்கு வீடு டிவி என்ற நிலை மாறி , இன்று ஓவருவர் வீட்டிலும் கம்ப்யூட்டர்
மற்றும் இன்டர்நெட் உள்ளது. .அதன் முலம் அன்றாடம் ஒருவருகொருவ
தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம். அந்த வகையில் நானும் என் கணவரும்
இன்டர்நெட்டில் குறிபிட்ட நேரத்தில் தினம் ஆஜர் ஆகிவிடுவோம். அருகில்
இருக்கும் பொழுது கூட அதிகம் பேசி இருந்திருக்க மாடோம்,. அனால் , இப்போழுது
நெட் மூலம் ஓவன்றையும் அலசி ஆராய்ந்து கொண்டிருகிறோம்.
சமீபத்தில் முக்கியமான ஒரு டாகுமென்ட் தேவை பட்டதால் வீடு முழுவதும்
ஆராய்ந்து , பீரோவில் பார், ஷெல்பில் பார், கப்போர்டில் பார் என்று என் கணவர்
அணைத்து இடத்திலும் தேட சொன்னார், நானும் தேடினேன் ..தேடினேன் ..
இம்.. கிடைக்கவே இல்லை .சலித்து போய் அமர்ந்து விட்டேன்.இனி திரும்பவும்
அந்த டாகுமென்ட் அப்பளை பண்ணி தான் வாங்க வேண்டும் என்றேன் சோகத்துடன்.
பீரோவை திற, காமெராவை ஆன் செய், முதல் ஷெல்பில் உள்ளதை எல்லாம் எடு ,
என்றார் அங்கிருந்தபடி, நானும் எல்லாம் பார்த்து விட்டேன் , மறுபடியுமா? என்றேன் .
ஓவர்ன்றாக கமெராவில் காட்டு என்றார். பிறகு அந்த பிரவுன் கலர் பையை காட்டு
என்றார் . அதில் நன்றாக பார் , அதில் தான் வைத்து இருந்தேன் என்றார். கேமரா அருகே
ஓவர்ன்றாக பிரித்து டாகுமென்ட் இல்லை என்றேன், முடிவாக ஒரு கவர் இருக்கும்
அதில் செக் பண்ணு என்றார். அதிலும் இல்லை என்றேன். நன்றாக பார் அதில் தான்
இருக்கும் என்றார் உறுதியாக ..கடைசியில் ஒரு மூலையில் அந்த முக்கியமான
டாகுமென்ட் ஒதுங்கி இருந்ததை கண்டு பிடித்தேன் . அசடு வழிய பார்த்தேன்.
இந்த இடத்தில அவருடைய அபாரமான ஞாபக சக்த்தியை பாராட்டியே ஆக வேண்டும்.
அடுத்து நெட்வொர்க் டெக்னாலஜிகு ஒரு சபாஷ் போட வேண்டும்.! இவை இரண்டும்
இல்லாத பட்சத்தில் நான் அந்த டாகுமெண்டை கண்டுபிடிக்க மிகவும் சிரமம்
மேற்கொண்டிருகவேண்டும். , உரிய நேரத்தில் கிட்டாமல் போய் இருந்திருக்கும்.
அவதிக்கு உள்ளாகி இருப்பேன். டென்ஷன் ஆட்கொண்டிருக்கும்.
இன்டர்நெட்டுக்கு ஒரு ஒ போட்டே ஆகவேண்டும்...ஆண்டவனுக்கு நன்றி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)