Thought for the day
வியாழன், 15 ஏப்ரல், 2010
செவ்வாய், 13 ஏப்ரல், 2010
இலவச ஆன்டி-வைரஸ்
மிகச்சிறந்த இலவச ஆன்டி-வைரஸ்
பணம் கொடுத்து 'ஆன்டி- வைரஸ்'
வாங்க முடியாத வாடிக்கையாளர்கள் தங்களுடைய
மென்பொருட்களை பயன்படுத்தியாவது பார்க்கட்டுமே என்ற
எண்ணத்தில் வழங்கப்படும் 'ஆன்டி-வைரஸ்'
தான் "இலவச ஆன்டி-வைரஸ்".
இந்தவகை மென்பொருட்களில் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டி-வைரஸில் இருப்பதை விட கொஞ்சம் குறைவான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்,சில வாடிக்கையாளர்கள் தங்கள் கணினுக்கு முழுமையான பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் பணம் கொடுத்தே ஆன்டி-வைரஸை வாங்கிக்கொள்வார்கள்.
ஆனால் என்னதான் பணம் கொடுத்து நாம் கணினியில் ஆன்டி-வைரஸ் போட்டுக் கொண்டாலும் புதுபுது வைரஸ்களின் அட்டகாசம் இன்றைக்கும் தாங்க முடியாததாகத்தான் உள்ளது.
குறிப்பாக நாம் இணையதளங்களில் உலவும்போது கண்டிப்பாக வைரைஸ்களின் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.அவை நாம் இணையதளங்களிருந்து ஏதாவது தரவிறக்கம் செய்யும்போது வைரஸும் அதன் கூடவே சேர்ந்து வந்து நம் கணினியில் உட்கார்ந்து கொள்ளும்.
இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் (வந்து கொஞ்ச நாள் ஆன) இலவச Microsoft Security Essentials என்ற மென்பொருள்.
பல கணினி உபயோகிப்பாளர்கள் பயன்படுத்தி பார்த்த வரையில் மிக அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் ஆன்டிவைரசாக Microsoft Security Essentials மென்பொருள் செயல்படுகிறது.குறிப்பாக இணையதளங்களில் நாம் உலவும்போது இந்த ஆண்டிவைரஸ் அதிகபட்ச இணைய பாதுகாப்பை நமக்கு தருகிறது.இந்த இலவச ஆன்டிவைரஸ்' நாம் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டிவைரஸ் தரும் அதிகபட்ச பாதுகாப்பை ஒத்த பாதுகாப்பை நமது கணினுக்கும் வழங்குகிறது.
அது மட்டுமல்லாமல் அதுவே தானாக அடிக்கடி தன்னை புதுப்பித்துக் கொள்வதால் நமது கணினிக்கு நல்ல பாதுகாப்பும் கிடைக்கிறது,இந்த ஆன்டிவைரஸை பயன்படுத்திப் பார்த்த பலபேர் இதன் செயல்திறனை வெகுவாக பாராட்டுகிறார்கள்
இங்கு கிளிக் பணவும்! download
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)