Thought for the day


வியாழன், 17 டிசம்பர், 2009

My Experience



                      அனைவரும் வருக வருக என்று வரவேற்கிறேன்
இன்று கணினி துறை எவ்வளவு வேகமாக முன்னேறி வந்து   உள்ளது !!!
நான் கணினி ஆசிரியராக பணிபுரிந்த பொழுது நடந்த  ஒரு சுவையான நிகழ்ச்சி :
சுமார் பனிரெண்டு வருடங்கள் முன்பு கணினிகளை பள்ளிக்கு அறிமுகபடுத்திய
 நேரம், மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு கணினி ஆசிரியராக பணியாற்றினேன் .கிராமத்து  பள்ளிகளில் கணினிபாட திட்டத்தை துவக்கிய நேரம் .           
கணினி வகுப்புக்கான மணி ஒலித்ததும்  மாணவ மாணவிகள் என்னை  மிகவும் எதிர்பார்ப்பார்கள். நானும் உற்சாகத்துடன் செல்வேன்.
                               அன்று  செயல்முறை வகுப்பு (பிரக்டிகல்).அனைவரும்  கணினி ஆய்வகம் (லேப்) என்பதால் மிகவும் பக்திஉடனும்   பரவசத்துடனும்  வந்தனர்.
ஏற்கனவே அவர்களுக்கு  ஸ்க்ரீன்  திரை , கீபோர்ட் ,மவ்ஸ், சிஸ்டம்  பற்றி தியரி வகுப்பில் விளக்கமாக சொல்லிருந்தேன் .அனைவரும் சிஸ்டம் முன்பு அமருங்கள் என்றேன் .அனைவரும் சிஸ்டத்தை சுவிட்ச் ஆன் பண்ணுங்கள் என்றேன்.
அந்த நேரம் உதவியாளர் வந்து எனக்கு போன் வந்திருபதாக சொன்னார் .
                                அருகில் இருந்ததால் சென்று வந்தேன். லேப் உள்ளே அங்கு நான் கண்ட காட்சி     வாய் விட்டு சிரிக்க வைத்தது!!! ஒரு மாணவன் கணினி அருகே சென்று  காது கொடுத்து பீப் ஒலி வருதா என்று பார்த்தான் .இன்னொரு மாணவன் பேன் உள்ளே சுற்றுகிறதா என்று உற்று     பார்த்தான். இவை
 அனைத்தையும் மிஞ்சும் வகையில் மாணவிகள் மௌஸ் நகரும் திசை எல்லாம் தங்கள்  தலை மற்றும் கழுத்தை அங்கும் இங்கும் நகர்த்திய வண்ணம்
இருந்தனர் . ஒரு மாணவி மட்டும் மிகவும் சோகமாக ஸ்க்ரீன் முன்பு தலை மீது கை வைத்து கொண்டு மௌஸ்ய் ஸ்க்ரீன் மேல் வைத்து  அங்கும்  இங்குமாக   நகர்த்தி கொண்டு .. ச்சே  இது என்ன நகரவே   மாட்டேன்குது !! என்று சலிப்புடன் ஸ்க்ரீன் மீது  மௌஸ்ய் மீண்டும் மீண்டும்  நகர்த்தினால், அது நகராமல்
நின்றது. பிறகு இப்படி இல்லைமா .. என்று அவள் கையை பிடித்து மௌஸ்  திண்டு மீது
வைத்து நகர்த்தி விளக்கமாக சொல்லி அன்று வகுப்பை நிறைவு செய்தேன்  .
                         இன்று என்னை எங்கு பார்த்தாலும் கம்ப்யூட்டர் டீச்சர் என்று வாஞ்சையுடன் விஷ் பண்ணுவார்கள். அவர்கள் இன்று  பெரிய நிறுவனங்களில்
சாப்ட்வேர்  பொறியாளர்கள்.  வெளி நாடுகளில் வேலை பார்கிறார்கள் சிலர்.  என்னுடைய மாணவ செல்வங்கள் இன்று பெரிய    நிறுவனங்களில் உள்ளது     எனக்கு பெருமையே !!  இன்றும் அவர்களை நினைத்து சிரிப்பேன் .

0 comments:

கருத்துரையிடுக