Thought for the day


செவ்வாய், 29 டிசம்பர், 2009

புதிய வைரஸ் : எச்சரிக்கை


Koobface என்ற புதிய வைரஸ் தற்போது உருவாகி கம்ப்யூட்டர்களை பழுதாக்கி வருகிறது. சமூக உறவு இணையத்தளங்களான facebook, twitter மற்றும் my space ஆகிய தளங்களை இது அதிகமாக தாக்கி வருவதாக தெரிகிறது.

Sky News தகவலின்படி face book இணையதளமே அதிகமாக பாதிப்புள்ளாகும் வாய்ப்பு இருக்கிறது.
You tube இணையதளத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்து வீடியோக்களில் இந்த வைரஸ் மறைந்து இருந்து யாரேனும் அந்த வீடியோக்களை கிளிக் செய்யும்போது கம்ப்யூட்டருக்குள் ஊடுருவி 3 நிமிடத்திற்குள் ஒரு புதிரை விடுவிக்கும்படி கேட்கும். அப்படி முடியாத பட்சத்தில் கம்ப்யூட்டர் வேலை செய்வதை நிறுத்தி விடும்.
கம்ப்யூட்டர் பயனாளர்கள் சந்தேகத்துக்கிடமான எந்த இணைய தள முகவரியையும் கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக